இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி கிழித்தெறிகிறார்! இந்திய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து காங்கிரஸ் கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


இந்திய தேர்தல் ஆணையர் அவசரகதியில் நியமித்தது குறித்து உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியின் நியமனங்கள் மற்றும் முடிவுகள் அனைத்தும் அரசியலமைப்பை கிழிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய ஊடகப் பொறுப்பாளர் பவன் கீரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "இது ஒன்றும் புதிதல்ல. பிரதமர் மோடியின் அனைத்து நியமனங்களும் நியமன முடிவுகளும் அரசியலமைப்பை கிழிக்கும் விதமாகவே உள்ளது" என பதிவிட்டுள்ளார். சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் அவசரகதியில் நியமிக்கப்பட்டது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அமர்வு தலைமை நீதிபதி நியமனம் எந்த வகையான மதிப்பீட்டில் நியமிக்கப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பினர். 

மேலும் அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதற்கு தகுதியானவரா என்பது குறித்து கேட்கவில்லை. அருண் கோயில் எந்த நடைமுறையில் குறுகிய இடைவெளியில் தேர்தல் ஆணையராக எப்படி நியமிக்கப்பட்டார் என்பது எங்களது கேள்வி என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து பொருள்படும் வகையில் காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress criticizes appointment of Election Commissioner of India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->