அரசியல் சாசனத்தை காக்க மோடியை கொல்ல தயாராகுங்கள்..!! காங்கிரஸ் கட்சி தலைவரின் பேச்சால் சர்ச்சை..!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் திக்விஜய் சிங் ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவர் ராஜா பட்டேரியா. இவர் தற்போது மத்திய பிரதேச காங்கிரஸ் துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவர் பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் நகரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டி விடுவார் என பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர் "மோடி மதம், சாதி, மொழியின் பெயரால் பிளவுபடுத்துபவர். தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினால், மோடியைக் கொல்வதற்கு தயாராகுங்கள். மோடியை வீழ்த்துவதாக கருதி கொல்லுங்கள்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்தின் முன்னாள் மந்திரியே கொல்லுமாறு அழைப்பு விடுத்தது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜா பட்டேரியாவின் இந்த பேச்சைக்காக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா இந்த சம்பவம் தொடர்பாக ராஜா பட்டேரியா மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். 

அதன்படி ராஜா பட்டேரியாவுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் ராஜா பட்டேரியா தன்னிலை விளக்கம் அளித்து ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அதில் "பவாயில் நடந்த கூட்டத்தில் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. நான் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவன். நான் யாரையும் கொல்ல வேண்டும் என்று கூற மாட்டேன். அரசியல் சாசனத்தையும், தலித்துகளையும், பழங்குடியினரையும், சிறுபான்மையினரையும் பாதுகாக்க மோடியை வீழ்த்துங்கள் என்றுதான் நான் பேசினேன்" என விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் மத்திய பிரதேச அரசியலில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader spoke Get ready to kill Modi to protect constitution


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->