பிரதமர் மோடிக்கு வாழ்த்து + வன்முறையான கருத்து விவகாரம் - கடிதம் எழுதிய கார்கே! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடிக்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், "பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்;

பிறந்தநாள் வாழ்த்துடன், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புடன் நேரடியாக தொடர்புடைய பிரச்னையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வன்முறையான கருத்துகள் தெரிவிப்பதை நீங்கள் அறிவீர்கள்.

ராகுல் காந்திக்கு எதிராக பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் பயன்படுத்தும் கருத்துகள், எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.

“மத்திய அமைச்சர், உத்தரப்பிரதேச மாநில அமைச்சர், மகாராஷ்டிரா பாஜக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., டெல்லி பாஜக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்டவர்கள் ராகுல் காந்தியை மிரட்டுகிறது வகையில் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த கொந்தளிப்பிலும், கவலையிலும் உள்ளனர்.

மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இத்தகைய வெறுப்புணர்ச்சி சக்திகளிடம் உயிரை இழக்க வேண்டியிருந்தது" என்று கார்கே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Mallikarjun Kharge letter to PM for wish and RahulGandhi issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->