பிரதமர் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்பு!! - Seithipunal
Seithipunal


பதவியேற்பு விழாவில் காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட வில்லை என்று சர்ச்சை எழுந்த நிலையில், இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே   உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 18 ஆவது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தலை நடத்தி இந்திய தேர்தல் ஆணையம் சாதனையை படைத்தது.

அதனைத் தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது . பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக தொடர்கிறது.

 இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று பதவியேற்கிறார். மோடி பதவியேற்பு விழாவிற்கு அண்டை நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சிக்கும் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் மோடி பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்க  உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress National President Mallikarjuna Kharge will attend the Prime Minister inauguration ceremony


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->