மேகாலயா மாநில முதல்வராக 2ஆவது முறையாக பதவியேற்றார் கான்ராட் சங்மா.!
Conrad sangma takes 2nd time chife minister of Meghalaya
மேகாலயா மாநில முதலமைச்சராக 2வது முறையாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா பதவியேற்றார்.
மேகலயா மாநிலத்தில் உள்ள 60 தொகுகளில் 59 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.
அதன்படி, மேகலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளுடன் 45 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.
அதைத் தொடர்ந்து மேகலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் கான்ராட் சங்மா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
மேலும், துணை முதல்வர்களாக பிரஸ்டோன் டைன்சாங் மற்றும் சியாவ்பலாங் தர் ஆகியோர் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.
English Summary
Conrad sangma takes 2nd time chife minister of Meghalaya