பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!
corona Booster vaccine
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் பூஸ்டர் டோஸ் வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
அதன்படி, முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளது.
மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின் பேரில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதேபோல், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் வரும் ஜனவரி 3 முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்களுக்கு, ஏற்கெனவே எந்த வகை தடுப்பூசியை போட்டிருக்கிறார்களோ அதே கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும் என்று மத்தியசுகாதாரத் துறை நேற்று அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை. மருத்துவரின் ஆலோசனை பெற்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்" என்று 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.