அதிகரித்து வரும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் பலி!
Corona increase last 24 hour4 people died
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் 2 பேர், கர்நாடக மாநிலத்தில் 2 பேர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து குளிர்காலம் என்பதால் புதிய வகை கொரோனாவான ஜே என் 1 வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
சிகிச்சைபெறுவோரின் எண்ணிக்கை 3919 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் 220.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Corona increase last 24 hour4 people died