வேகமெடுக்கும் கொரோனா: சண்டிகர் நிர்வாகம் அதிரடி உத்தரவு!
Corona increasing Chandigarh administration order
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று மட்டும் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1997 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே கேரளா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்கள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சண்டிகர் நிர்வாகம், பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Corona increasing Chandigarh administration order