இந்தியாவில் இன்னும் இத்தனை கோடி பேர்கள் இதை செய்யவே இல்லை.! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்தில் மக்களவையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதில் அளித்துள்ளார். 

அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, 

"ஜூலை 18-ம் தேதி வரை, நாடு முழுவதும் அரசு தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மொத்தம் 1,78,38,52,566 தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன. இது 97.34 சதவீதமாகும். சுமார் 4 கோடி பேர் ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தவில்லை. மார்ச் 16-ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்கள் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. 

18 வயது முதல் 59 வயது உட்பட்டோருக்கு ஏப்ரல் 10-ம் தேதியில் இருந்து பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 75 நாட்கள் அரசு தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது.

இந்தியாவில் 98 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மேலும், 90 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்". என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona vaccine report july


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->