ஆடுகளத்தில் மயங்கி விழுந்த கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு.!
cricket player died in maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த வீரர், சுருண்டு விழுந்து உயிரைவிட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, ஜல்னா ஃப்ரேசர் பாய்ஸ் மைதானத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அப்போது, விளையாடிக்கொண்டிருந்த வீரர் ஒருவர், சகவீரருடன் பேசிவிட்டு நடந்து சென்றபோது திடீரென சுருண்டு விழுந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வீரர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த விசாரணை நடத்தியதில், உயிரிழந்த வீரர், விஜய் படேல் என்பது அடையாளம் காணப்பட்டார். இந்த சம்பவம் சக வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
cricket player died in maharastra