CUET முதுகலை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.!
CUET PG exam apply online From today
க்யூட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு க்யூட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான முதுகலை பட்டபடிப்புகளுக்கான க்யூட் தேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் வரும் ஏப்ரல் 19ம் தேதி மாலை 5 மணி வரை cuet.nta.nic.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
English Summary
CUET PG exam apply online From today