அவதூறு வழக்கு...  ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.!  - Seithipunal
Seithipunal



கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எப்ப ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக தெரிவித்து பா.ஜ.கவை சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்தி எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு விசாரணை சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கு விசாரணை நடத்தும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி, கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி அமேதியில் நடந்த பாரத் ஜோடா நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். 

அப்போது அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதை தொடர்ந்து,  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

இதில் ராகுல் காந்தி வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Defamation case Court orders Rahul Gandhi appear person


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->