இந்தியாவில் இரண்டு ட்விட்டர் அலுவலகம் மூடல்.!  பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை கடந்த ஆண்டு தன்வசப்படுத்தினார். அதன் பின்னர். ட்விட்டர் நிறுவனத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

அதில் முதலாவதாக, டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி பணிபுரிந்து வந்த பராக் அகர்வால் உள்பட நான்கு முக்கிய உயர் அதிகாரிகளையும், 7 ஆயிரத்து 500 பணியாளர்களையும் அதிரடியாக பணிநீக்கம் செய்தார். இவரது அதிரடி நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதைத் தொடர்ந்து ட்விட்டரில் அதிகார பூர்வ கணக்கு என்பதை உறுதி செய்யும் வகையில், ப்ளூ டிக்கிற்கு மாதாந்திர கட்டணத்தையும் அறிவித்தார். ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வந்த மூன்று டுவிட்டர் அலுவலகங்களில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள தனது அலுவலகங்களை டுவிட்டர் நிறுவனம் மூடியுள்ளது. மேலும், பெங்களூரில் உள்ள அலுவலகம் மட்டும் தொடர்ந்து செயல்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மூடப்பட்டுள்ள இரண்டு அலுவலகங்களில் பணியாற்றியவர்களைத் தற்போது வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளார். நிறுவனத்தின் செலவை குறைக்கும் நடவடிக்கையாக இந்தியாவில் செயல்பட்டு வந்த மூன்று அலுவலகங்களில் இரண்டை மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi and mumbai twitter offices close


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->