யமுனை நதியில் கெஜ்ரிவாலை நனைத்த பாஜக வேட்பாளர்.!
delhi bjp candidate protest with kejriwal banner in yamuna river
டெல்லி சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவு செய்யப்படும் வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கெஜ்ரிவாலின் பேனரை யமுனை நதியில் மூழ்கச் செய்து பாஜக வேட்பாளர் நூதன பிரசாரம் ஈட்டுபட்டார். அதாவது இன்று காலையில் புதுடெல்லி தொகுதியின் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா படகு ஒன்றில், டெல்லி முன்னாள் முதலmaichar அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயருடன் யமுனை நதியில் பயணம் செய்தார்.
அவருடன் கட்சி உறுப்பினர்கள் சிலரும் இருந்தனர். இதைத் தொடர்ந்து நதியின் மையப்பகுதிக்கு சென்ற பாஜக வேட்பாளர், கெஜ்ரிவாலின் உருவப் படத்தை யமுனையில் பல முறை மூழ்கடித்தார். அந்த பேனரில் கெஜ்ரிவால் தனது இரு காதுகளையும் பிடித்திருப்பது போன்று இருந்தது. அதுமட்டுமல்லாமல், அந்த பேனரில் 'நான் தோல்வியடைந்து விட்டேன், 2025-க்குள் யமுனையை தூய்மைப்படுத்த தவறி விட்டேன். எனக்கு வாக்களிக்க வேண்டாம்' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து பர்வேஸ் வர்மா தெரிவித்ததாவது, "யமுனை நதியை நாம் முழுமையாக தூய்மைப்படுத்த முடியும். அதைத் தூய்மைப்படுத்துவது ஒன்றும் ராக்கெட் அறிவியல் இல்லை. பிரதமர் மோடி, சபர்மதி நதியில் செய்தது போல, நாம் யமுனை நதியில் செய்ய முடியும். அதற்கு 11 வருடங்கள் என்பது மிக நீண்ட காலம்" என்று தெரிவித்தார்.
English Summary
delhi bjp candidate protest with kejriwal banner in yamuna river