ஒரு நொடியில் இடிந்து விழுந்த டெல்லி 5 மாடி கட்டிடம்! அதிர்ச்சி வீடியோ! - Seithipunal
Seithipunal


டெல்லி, விஜய் பார்க் பகுதியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வெளியான முதல்கட்ட தகவல் : கிழக்கு டெல்லியின் விஜய் பார்க் அடுத்த பஜன்புரா பகுதியில் இன்று மாலை அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மாலை 3.05 மணிக்கு விஜய் பூங்காவில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த தகவலிருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

தற்போது மீட்புப் பணியில்  தீயணைப்புத் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கட்டடத்தில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்ற தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. 

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இந்த சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சாலைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு மாற்று வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi building collapse 08032023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->