5 புதிய அமைச்சர்களுடன், டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்று கொண்ட அதிஷி!   - Seithipunal
Seithipunal


டெல்லி கல்காஜி தொகுதியின் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற அதிஷி, தற்போது முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டுள்ளார். 

சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித்தை தொடர்ந்து, டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சர் அதிஷி பதவி ஏற்று கொண்டுள்ளார்.

முதலமைச்சர் அதிஷியுடன் சேர்ந்து, 5 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். கோபால் ராய், சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட ஐந்து பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டுள்ளனர். 

இம்ரான் ஹுசைன், முகேஷ், கைலாஷ் கெலாட் ஆகியோரும் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டுள்ளனர். 

இந்த பதவியேற்புக்கு பிறகு வருகின்ற 26, 27 ஆம் தேதிகளில் டெல்லி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் அதிஷி தனக்கான பெரும்பான்மையை நிரூபிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மொத்தம் 70 இடங்களை கொண்ட டெல்லி சட்ட சபையில் ஆம் ஆத்மி கட்சி 61 இடங்களை தற்போது வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi CM Atishi Marlena


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->