டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டார். 

மக்களவைத் தேர்தல் காரணமாக முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது.

தேர்தல் முடிந்து ஜூன் 26 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அன்றுமுதல் திகார் சிறையில் இருந்துவரும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு பல கட்டங்களமாக நடந்து வந்த நிலையில், அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து இரண்டு நாட்களில் விலக உள்ளேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திகார் சிறையில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால், டெல்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்களிடையே உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவரை அந்த உரையில், "நான் நேர்மையானவன் என மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதலமைச்சர் நாற்காலியில் மீண்டும் அமர மாட்டேன். முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியவுடன், டெல்லியில் உள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை சந்திக்க உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi CM Resign in two days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->