ஐந்து கி.மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.! என்ன நடக்கிறது டெல்லியில்?!
DELHI FARMARES PROTEST FULL TRAFIC
வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி படையெடுத்தனர்.
![](https://img.seithipunal.com/media/gasdg.png)
காவல்துறையினர், போராட்டத்திற்கு வரும் வாகனங்களை எல்லைப் பகுதியில் நிறுத்தி சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர்.
இதனால், உத்தரப்பிரதேசம் - டெல்லி எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நொய்டா - சில்லா எல்லையில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/hsdrh.png)
இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்தினால் எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை என்றும், காவல் துறையினர் வாகன பரிசோதனையினாலே எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
DELHI FARMARES PROTEST FULL TRAFIC