மகா சிவராத்திரி அன்று சிவனை எவ்வாறு வழிபட்டால் பாவங்கள் நீங்கும்..?
How to worship Lord Shiva on Maha Shivaratri
சிவனுக்குரிய விரதங்களில் மகா சிவராத்திரிமிக முக்கியமான விரதமாகும். மாசி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து, இரவில் கண் விழித்து வழிபட்டால் சிவ பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
அதாவது, சிவ பெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளாக மகா சிவராத்திரி நாள் கருதப்படுகிறது. அத்துடன், பிரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடியை தேடி சென்றதாகவும்,இறுதியில் சிவன் ஜோதி பிழம்பாக அவர்கள் முன் தோன்றியதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. சிவராத்திரி அன்றுதான் சிவ பெருமான் ஆனந்த தாண்டவத்தை ஆடிக் காட்டுவதாக ஐதீகம் சொல்கிறது.
![](https://img.seithipunal.com/media/shivan 3-yv6hk.jpg)
மகா சிவராத்திரி வழிபாடு
மகா சிவராத்திரி அன்று சிவனை வழிபட்டால் அனைத்து விதமான பாவங்களும் நீங்குவதோடு, சிவனின் அருள் கிடைக்கும்.
சிவராத்திரி அன்று வீட்டில் விரதம் இருந்து வழிபடுவதை வீட, சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் சிவ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்ய வேண்டும்.
சிவராத்திரியன்று மாலை 06 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 06 மணி வரை நான்கு கால பூஜைகள் நடைபெறும். இந்த நான்கு கால பூஜைகளின் போது தொடர்ந்து ஓம் நம சிவாய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் அல்லது சிவ மந்திரங்களை பாராயணம் செய்யலாம்.
![](https://img.seithipunal.com/media/shivan 1-em6ml.jpg)
ஒவ்வொரு சிவன் கோவிலாக செல்வதை விட ஏதாவது ஒரு கோவிலில் அமர்ந்து, சிவனை நினைத்து தியானம் செய்தல் போதுமானது.
சிவராத்திரி அன்று குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஒரு ஆலயத்தில் இருந்து சிவனை நினைத்து தியானம் செய்யவேண்டும்.
சிவன் கோவிலில் பாடப்படும் பாடல்கள், சொல்லப்படும் சிவராத்திரி கதைகளை இறை சிந்தனையுடன் கேட்க வேண்டும்.
சிவராத்திரி அன்று அன்னதானம் வழங்குவதும்,கொடுக்கப்படும் அன்னதானத்தை வாங்குவது சிறப்பு வாய்ந்தது.
மகா சிவராத்திரி பூஜைக்கு அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம். வில்வம் வாங்கிக் கொடுக்க வேண்டும், ஒரே ஒரு வில்வமாவது சிவனுக்கு சாற்றி வழிபட வேண்டும்.
![](https://img.seithipunal.com/media/shivan 4-b5nxh.jpg)
இரவு முழுவதும் கண் விழிக்க முடியாவிட்டாலும் மூன்றாவது மற்றும் நான்காவது காலங்களில் கண்டிப்பாக கண் விழிக்க வேண்டும். மூன்றாம் கால பூஜை என்பது முக்தியை தரக் கூடியதாகும்.
இந்த நேரத்தில் சிவ பூஜை செய்வதும், சிவ தரிசனம் செய்வதும் மிக மிக சிறந்தது.
நான்காம் கால பூஜை என்பது அனைத்து தெய்வங்கள், தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் ஆகியோர் சிவனை வழிபடுவதற்கான நேரமாகும். இது சிவ பெருமான் நமக்கு வரம் தரும் காலம்.
மகா சிவராத்திரி பூஜையில் கலந்து கொள்ளும் பெரும்பாலானவர்கள் நான்காவது பூஜையின் போது புறப்பட்டு சென்று விடுவார்கள். இதனால் மகா சிவராத்திரி விரதம் இருந்து, வழிபாடு செய்த பலன் முழுமையாக கிடைக்காமல் போய் விடும்.
மகா சிவராத்திரி அன்று இரவு சிவ தரிசனம் செய்பவர்களுக்கு முற்பிறவிகளில் செய்த பாவங்கள் மட்டுமல்லாமல், இந்த பிறவியில் தற்போது வரை செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, சிவனின் அருளை பெற முடியும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
English Summary
How to worship Lord Shiva on Maha Shivaratri