மீண்டும் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி..?
Will Virat Kohli become the captain of the RCB team again
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 06 பேரை தக்க வைத்துக்கொண்டது.
இதுவரை நடந்த ஐபில் போட்டிகளில் ஆர்சிபி அணி ஒரு தடவை கூட கோப்பையை கைப்பற்றவில்லை என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். கடந்த சில சீசன்களாக ஆர்சி அணியை பிடூ பிளெஸ்சி வழி நடத்தி வந்தார்.
ஆனால், நடந்து முடிந்த ஐ.பி.எல். ஆர்சி அவரை ஏலத்தில் விட்டது. டெல்லி அணி அவரை 02 கோடி ரூபாய்க்கு கொடுத்து ஏலத்தில் வாங்கியது.
இந்நிலையில், மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை. இதனால் விராட் கோலி அல்லது ரஜத் படிதார் இருவரில் ஒருவரையே பெங்களூரு அணி நிர்வாகம் கேப்டனாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இதில், ரஜத் படிதார் உள்ளூர் அளவில் சிறப்பாக ஆடியிருக்கிறார். இவர் மத்திய பிரதேச அணியை வழிநடத்தி சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார்.அத்துடன், அவர் பெங்களுரு அணி கேப்டன் பதவி கிடைத்தால் மகிழ்ச்சி என வெளிப்படையாகவும் பேசியிருக்கிறார்.
இந்நிலையில், பெங்களூரு அணியின் அடுத்த கேப்டனாக விராட் கோலியை தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம். ஆனால், அவர் இதற்கு சம்மதிக்க வேண்டும். இன்று காலை 11:30 மணிக்கு பெங்களுரு அணி தங்களின் புதிய கேப்டனை அறிமுகம் செய்யவிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Will Virat Kohli become the captain of the RCB team again