அடுத்த ஆண்டு இந்தியாவில் ஜனநாயக திருவிழா கொண்டாடப்பட உள்ளது- ஜி-20 கூட்டத்தில் பிரதமர் மோடி உரை - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டு 100 கோடி வாக்காளர்கள் ஜனநாயக திருவிழாவைக் கொண்டாடுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கோவாவில் ஜூன் 19-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் ஜி-20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கோவா வந்துள்ளனர்.

உலக அளவில் சுற்றுலாத்துறையில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதித்து தீர்வு காண்பதை நோக்கமாக கொண்டு இந்த ஜி20 கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக இந்த ஜி-20 கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர் இந்தியா பண்டிகைகளின் தேசம். நாடு முழுவதும் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஜனநாயகத்தின் தாயகமாக விளங்கும் இந்தியாவில் நீங்கள் பார்க்க வேண்டிய ஜனநாயகத்தின் திருவிழா ஒன்று உள்ளது.

அடுத்த ஆண்டு, பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக, ஏறக்குறைய 100 கோடி வாக்காளர்கள் இந்த விழாவைக் கொண்டாடி, ஜனநாயகத்தின் மீது இருக்கும் தங்களுடைய நிலையான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Democracy festival to be celebrated in India next year PM Modi speech at G20 meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->