நக்சலைட்டுகள் இல்லா மாநிலம் - எது தெரியுமா?
deputy cm dk sivakumar announce no naxalites in karnataga
கர்நாடகா மாநிலத்தில் பல பகுதிகளை சேர்ந்த ஆறு நக்சலைட்டுகள் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா மற்றும் மூத்த காவல் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தனர்.
அதாவது, கேரளாவில் இருந்து ஜிஷ், தமிழகத்தில் இருந்து வசந்த் கே., கர்நாடகாவின் சிக்கமகளூரு பகுதியில் இருந்து லதா மற்றும் வனஜாக்ஷி, தட்சிண கன்னடா பகுதியில் இருந்து சுந்தரி மற்றும் ராய்ச்சூர் பகுதியில் இருந்து மரப்பா அரோலி உள்ளிட்ட ஆறு பேர் அவர்களுடைய சீருடைகளை ஒப்படைத்து விட்டு, சரணடைவதற்கான கடிதம் ஒன்றையும் வழங்கினர்.
இவர்களின் முடிவை முதலமைச்சர் சித்தராமையா வரவேற்றார். இது குறித்து துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவிக்கையில், கர்நாடகாவை நக்சலைட்டுகள் இல்லா மாநிலம் என்று அறிவிப்பதில் அரசு மகிழ்ச்சி கொள்கிறது.
எங்களுடைய அரசு, போலீஸ் அதிகாரிகள் மற்றும் நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் அவர்களுக்கான புனரமைப்பு பணிகளுக்காக அரசு அமைத்துள்ள குழு ஆகியவற்றின் தனித்துவ முயற்சிகளை நினைத்து பார்க்கிறேன்.
6 நக்சலைட்டுகள் இன்று சரணடைந்துள்ளனர். அவர்களின் வேண்டுகோள்களையும் நாம் மதிக்க வேண்டும். அவர்களுக்கு முதலமைச்சர் சித்தராமையா, அரசியலமைப்பு புத்தகம் ஒன்றை வழங்கியுள்ளார்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
deputy cm dk sivakumar announce no naxalites in karnataga