இடைத் தேர்தல் எதிரொலி - நாளை முதல் வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் காலமானார். இதையடுத்து தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதியைக் காலியானதாக அறிவித்து அதற்கான தேதியையும் வெளியிட்டது.

அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்பாளர்கள் வருகின்ற 17-ந் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 

அதாவது, பொங்கல் மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறை நீங்கலாக 10 ஆம் தேதி, 13, மற்றும் 17 உள்ளிட்ட மூன்று தேதிகளில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்ததாவது:- 

"வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வேட்பாளர் வரும் போது மூன்று கார்களில் 200 மீட்டருக்கு அப்பாலும், ஒரு காரில் 100 மீட்டர் வரையும் அனுமதிக்கப்படுவர்" என்று தெரிவித்தார். நாளை முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளதால் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nomination fill start tomorrow in erode for by election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->