அமிர்தசரஸ் பொற்கோவிலினுள் அத்துமீறி நுழைந்த நபர்... அடித்தே கொன்ற பக்தர்கள்..!
Devotees beat to death a man who trespassed into the Golden Temple of Amritsar
பொற்கோவிலினுள் நுழைந்து புனித நூலை அவமதிக்கும் வகையில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் அமைந்துள்ள பொற்கோவில் சீக்கியர்களின் புனித ஸ்தலமாக விளங்குகிறது இந்த கோயிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான சீக்கியர்களும் பொதுமக்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்தக் கோவிலில் சீக்கியர்களின் புனித நூல் மற்றும் வைரம் பதித்த வால் ஆகியவை கருவறையில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகின்றன இந்த அறையினுள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இன்னிலையில் நேற்று தரிசனத்திற்காக வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென குருக்கள் பூஜை செய்யும் அறைக்குள் நுழைந்தார் அதனை அடுத்து புனிதநூல் மற்றும் வைரம் பதித்த வாலை எடுக்க முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் பாதுகாவலர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரை பிடித்து வெளியே இழுத்து வந்தனர் அப்போது கோபம் அடைந்த பக்தர்கள் அவரை அடித்து உதைத்தது அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் பொற்கோவில் அவமதிக்கும் வகையிலான செயலுக்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Devotees beat to death a man who trespassed into the Golden Temple of Amritsar