தீ விபத்து - உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு நிதியுதவி.!
uttar pradesh cm compensation announce fire accident died childrens family
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் திடீரென தீப்பிடித்ததால் தகவலறிந்து தீயணைப்புத்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டன.
இந்த தீவிபத்தில் சுமார் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், தீ விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக 12 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜான்சி மாவட்ட காவல்துறை ஆணையருக்கும், துணை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
uttar pradesh cm compensation announce fire accident died childrens family