அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - திருப்பதியில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம்.!
devotees long time wait for swami dharisanam in tirupati
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைத் தருகின்றனர். அதிலும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட அதிகமாகவே வந்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை முதல் பக்தர்களின் வருகை அதிகளவில் உள்ளது. பக்தர்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் நேற்று மாலை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று மாலை முதல் இரவு வரை இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்களை தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான அதிகாரிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் இன்று காலையில் பக்தர்கள் 30 மணி நேரத்திற்கு மேலாக தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதியில் நேற்று மட்டும் 75,916 பேர் தரிசனம் செய்தனர். 42,920 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.87 கோடி உண்டியல் காணிக்கை வசூல் வந்துள்ளது.
English Summary
devotees long time wait for swami dharisanam in tirupati