தனுஷ் - ஐஸ்வர்யா எடுத்த திடீர் முடிவு?...நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு! - Seithipunal
Seithipunal


முன்னணி நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

தங்களது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு வந்த இந்த தம்பதி சமீபத்தில் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். பின்னர் இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதுடன், பரஸ்பரம் விவாகரத்துக் கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி விசாரணைக்கு வந்தப்போது இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் மனுதாரர் இருவரும் நேரில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அப்போதும் இருவரும் நேரில் ஆஜராகாததால் விசாரணையை நவம்பர் 2ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தொடர்ந்து அப்போதும் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர்  விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று ஒத்தி வைத்த நிலையில், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா நேரில் ஆஜராகி இருவரும் பிரிவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வரும் 27-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dhanush aishwarya sudden decision court sensational order


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->