விவாகரத்து வழக்கு : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் ஆஜர்!
Divorce case aishwarya rajinikanth appears in person
முன்னணி நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
தங்களது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு வந்த இந்த தம்பதி சமீபத்தில் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். பின்னர் இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதுடன், பரஸ்பரம் விவாகரத்துக் கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி விசாரணைக்கு வந்தப்போது இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் மனுதாரர் இருவரும் நேரில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அப்போதும் இருவரும் நேரில் ஆஜராகாததால் விசாரணையை நவம்பர் 2ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தொடர்ந்து 3-வது முறையாக நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதன்படி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.
English Summary
Divorce case aishwarya rajinikanth appears in person