கர்நாடகாவில் வாழும் தமிழர்களும் காவிரி நீரை தான் குடிக்கின்றனர்! தமிழக அரசிடம் முறையிடுவேன் - டிகே சிவகுமார் பரபரப்பு டிவிட்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், மேகதாது கட்டுவதற்கு முதல் அமைச்சரவை கூட்டத்தில் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தொடர்ந்து தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன் நீர்வளத்துறை அதிகாரிகளின் அந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர், நீர்வளத் துறை அமைச்சர் டிகே சிவகுமார்,  "மேகதாது அணை விவகாரத்தில் பிரச்சனை இருப்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. நாம் மேகதாது அணையை கட்ட வேண்டும். நான் உங்களோடு இருக்கிறேன். அணையை கட்டுங்கள்" என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்க்கு பாமக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிட உள்ளதாக, கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், "மேகதாது அணை கட்ட 1000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. ஆனால் செலவிடப்படவில்லை. அந்த பணம் மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த பயன்படுத்தப்படும். 

தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை. அவர்கள் நம் சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள். கர்நாடகாவில் வாழும் தமிழர்களும், தமிழகத்தில் வாழும் கன்னடர்களும் காவிரி நீரை குடித்து வருகின்றனர். 

நீதிமன்றம், அலுவலகம் அலைந்தாலே போதும். மேகதாது திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடையும். காவேரி படுகையில் விவசாயிகளுக்கு பாசனமும், சாமானியர்களுக்கு குடிநீரும் வழங்கப்படும்.

தமிழக அரசிடம் முறையிடுவேன். அண்டை மாநிலங்களை சகோதர சகோதரிகளாக வாழ விடுங்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு ஒன்றுபடுவோம்" என்று டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DK Shivkumar Say About Mekedatu issue and TN GOVT


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->