பொள்ளாச்சி விவகாரம் இதோடு முடித்துக்கொள்ளுங்கள்! தீர்ப்பளித்த அப்பாவு! கொந்தளித்த அதிமுகவினர்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் நேற்று பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 12 நாள் கழித்துதான் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், நான் ஆதாரம் காட்ட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து இருதரப்பும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அப்பாவு தெரிவிக்க இன்று சட்டப்பேரவை கூடியதும் திமுக, அதிமுகவினர் ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி சம்பவத்தில் முதலமைச்சர் சொன்னதில் தான் உண்மை உள்ளது என்று, சபாநாயகர் அப்பாவு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

நான் கூறும் தீர்ப்பு தான் இறுதியான தீர்ப்பு. இரண்டு தரப்பு ஆதாரங்களையும் நான் பார்த்துவிட்டேன், இருவரும் இதோடு பொள்ளாச்சி விவகாரத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்றும் அப்பாவு தெரிவித்தார்.

இருப்பினும் சபாநாயகரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் முழக்கம் இட்டபடி சட்டசபையைவிட்டு வெளியேறினர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pollachi Tamilnadu Assembly 2025 Appavu CMStalin AIADMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->