கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்..துணைநிலை ஆளுநர் வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தியுள்ளார் .

புதுவை மாநிலம் முழுவதும் வரும் 12-ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டுமென புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது,இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள்,பல்வேறு சமூக அமைப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராடங்களையும் நடத்தினர்.

இந்த நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தியுள்ளார் .

புதுவையில் காவல்துறை சார்பில்  கடற்கரை சாலையில் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் சாலை விபத்தில் உயிரிழப்பு இல்லா புதுச்சேரி இயக்க தொடக்க விழா நடைபெற்றது.

இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.முக்கிய சாலைகள் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணி  தலைக்கவசம்மற்றும் சாலை விபத்தில் உயிரிழப்பு இல்லா புதுச்சேரி என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

முன்னதாக  விழிப்புணர்வு பேரணி தொடக்கவிழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wearing a helmet is mandatory Lieutenant Governor's request


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->