கடல் அரிப்பு - குலசேகரப்பட்டினத்தில் பொதுமக்கள் அச்சம்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. அதாவது, கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் சுமார் 200 அடி தூரத்துக்கு 8 அடி ஆழத்துக்கும் அதிகமாக அரித்து சென்றது. 

இந்தக் கடல் அரிப்பால் பாறைகள் வெளியில் தென்படுவதால் புனித நீராடும் பக்தர்கள் அவற்றில் நின்று அவதிப்படுகின்றனர். இந்த நிலையில், திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினத்திற்கு இடையிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. 

குலசேகரன்பட்டினம் வடக்கூரை அடுத்த காட்டு பகுதியில் கடற்கரையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பனை மரங்களை கடல் அலைகள் சூறையாடியுள்ளன. 

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன்ர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sea erosion in kulasekarapptinam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->