திருமணம் மோசடி! மருத்துவருக்கு அல்வா குடுத்து ரூ.5 லட்சத்தை சுட்டிய பெண் கைது! - Seithipunal
Seithipunal


திருவனந்தபுரத்தில் திருமணம் மோசடியில்  சிக்கி மருத்துவர் ரூ.5 லட்சம் பறிகொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து தனிமையில் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அவர் அரசு மருத்துவமனை மருத்துவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனை எடுத்து அவர் கர்நாடக மாநிலத்திற்கு சென்று அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

மருத்துவமனையில் பழக்கம் ஏற்பட்ட நபர்கள் கோழிக்கோடு நிலாஸ்வரர் பகுதியை சேர்ந்த இர்ஷானா என்ற இளம் பெண்ணை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இர்ஷானா உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக அந்த கும்பல் மருத்துவரிடம் நைசாக பேசியுள்ளனர். இளம் பெண் என்பதால் மருத்துவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இர்ஷானாவின் சகோதரர் என்று அறிமுகமான ஒரு நபர் கோழிக்கோடியில் வைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார். பின்னர் திருமணம் முடிந்ததும் இருவரையும் குடியமர்ந்த வீடு பார்க்க பணம் வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு மருத்துவர் ரூபாய் 5 லட்சம் தனது மனைவின் அண்ணன் என்று நினைத்துக் கொண்டிருந்த அந்த நபரிடம் கொடுத்துள்ளார். பிறகு பணத்தை வாங்கிக் கொண்டு டாக்டர் ஒரு மசூதிக்கு முன் விட்டு விட்டு அனைவரும் மாயமாகி உள்ளனர். நீண்ட நேரங்களாக அதே பயணத்தில் காத்திருந்த மருத்துவர் தான் திருமண மோசடியில் சிக்கியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் திருமண மோசடியில் ஈடுபட்ட கும்பல் பற்றி கோழிக்கோடு போலீசாரில் மருத்துவர் புகார் அளித்தார். புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் இர்ஷானா போலீசாரிடம் சிக்கி உள்ளார் . அவரிடம் திருமணம் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Doctor caught in marriage scam in Thiruvananthapuram Rs 5 lakh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->