அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றில் டவல் - ராஜஸ்தானில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை பிரசவம் நடந்தது. அப்போது தவறுதலாக மருத்துவர்கள் அந்த பெண்ணின் வயிற்றில் டவலை வைத்து தைத்துள்ளனர். 

இதனால் அந்த பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண்ணுக்கு வலி குறையாததால் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அந்த பெண்ணின் வயிற்றில் 15x10 செமீ துண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த டவலை அகற்றினர். ஆனால், வயிற்று வலி காரணமாக, அந்த பெண்ணால் குறைவாகவே சாப்பிட முடிந்துள்ளது. மேலும், தாய்ப்பாலின் உற்பத்தியை கணிசமாகக் குறைத்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து சிஎம்எச்ஓ அனில் ஜூடியா, விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளார் மற்றும் அறிக்கை கிடைத்த பிறகு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctors surgery to women with taval in rajasthan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->