நாளை தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
Cuddalore mayiladuthurai Puducherry school college leave Trichy University exam postpone
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது. இன்று காலை வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை நடைபெற இருந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் தெரிவிக்கப்படும் என தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
English Summary
Cuddalore mayiladuthurai Puducherry school college leave Trichy University exam postpone