பூரி ஜெகநாதர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு.! எப்போதிலிருந்து? - Seithipunal
Seithipunal


பூரி ஜெகநாதர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு.! எப்போதிலிருந்து?

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் உள்ளே கேமரா, செல்போன் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லவும், படம் எடுக்கவும் தடை உள்ளது.

இந்த நிலையில், இந்தக் கோயிலில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அவர் கோவிளுக்கு வரும் சிலர் "அநாகரீகமான" உடை அணிந்து வருவதால், 'நிதி' துணைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இது தொடர்பாக கோவில் நிர்வாகத் தலைவர் ரஞ்சன் குமார் தாஸ் தெரிவித்ததாவது, "கோயிலின் கண்ணியத்தையும், புனிதத்தையும் காப்பது எங்கள் பொறுப்பு. துரதிஷ்டவசமாக, சிலர் மற்றவர்களின் மத உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் கோவிலுக்குச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது.

சிலர் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட், ஸ்லீவ்லெஸ், அரைக் கால்சட்டை உள்ளிட்டவற்றை அணிந்து, கடல் கடற்கரையிலோ, பூங்காவிலோ உலா வருவது போல் கோவிலுக்கு வந்துள்ளனர். கோவில் கடவுளின் இருப்பிடம், பொழுதுபோக்கிற்கான இடம் அல்ல. 

கோவிலில் எந்த வகையான ஆடைகளை அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். கோயில் நிர்வாகம் பக்தர்களிடையே ஆடைக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கும்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dress code enforce in poori jeganathar temple from january 1st


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->