இனி வெள்ளை வெட்டி வெள்ளை சட்டைதான்.. ஊழியர்களுக்கு உத்தரவிட்ட திருப்பதி தேவஸ்தானம்.!
dress code restriction to tirupathi devasthanam employees
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சனிக்கிழமைகளில் வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து பணிக்கு வரவேண்டும்.
அனைத்து ஆண் ஊழியர்களும் தங்கள் நெற்றியில் திலகம், குங்குமம், விபூதி வைத்திருக்க வேண்டும். அதேபோல் பெண் ஊழியர்கள் இந்துக்களின் புடவை, ரவிக்கை, சுடிதார் மேல் துப்பட்டாவுடன் அணிந்து, நெற்றியில் திலகம், குங்குமம், ஸ்டிக்கர்களை வைக்க வேண்டும்.
இந்த ஆடை கட்டுப்பாட்டை அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல், தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் ஒருவரையொருவர் மற்றும் பிறரை சந்திக்கும் போது 'கோவிந்தா' அல்லது 'ஓம் நமோ வெங்கடேசாயா' என்று கூறி விட்டு பின்னர் பேச தொடங்க வேண்டும்.
மேற்கூறிய இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத ஊழியர்கள் மீது கடும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
dress code restriction to tirupathi devasthanam employees