ஓட்டுனரிடம் லைசன்ஸ் கேட்ட போலீசாரை ஓட்டுனர் காரோடு இழுத்து சென்றதால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


ஹரியானாவில் மது போதையில் காரை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் லைசன்ஸ் கேட்ட போலீசாரை ஓட்டுனர் காரோடு இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் போக்குவரத்து போலீசார் ஒருவர் வாகன சோதனை ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த காரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் ஆவணங்களை கேட்டுள்ளார்.

போக்குவரத்து போலீஸ் காவல் அதிகாரி காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மது போதையில் இருப்பதை அறிந்த போலீசார் அபராதம் விதிக்க முயன்றதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென ஓட்டுநர் காரை இயக்கியதால் போக்குவரத்து காவல் அதிகாரி காரின் கதவில் தொங்கியபடியே சில மீட்டர்கள் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டார்.

இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் காரை மடக்கி பிடித்தனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

driver pulled the policeman with the car who asked for the license and there was a commotion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->