இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே போதைப்பொருளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்.!
Drone carrying heroin shot down near India Pakistan border in punjab
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே நேற்று போதைப்பொருள் கடத்திய ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பஞ்சாப் காவல்துறையினர் எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அமிர்தசரஸில் உள்ள சர்வதேச எல்லையில் அருகே போதை பொருட்களுடன் பறந்து வந்த டிரோனை கவனித்த பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இந்த ட்ரோன் இந்தியா-பாக்கியான் எல்லையில் இருந்து சுமார் இரண்டு கிமீ தொலைவில் உள்ள கக்கர் கிராமத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ட்ரோனை ஆய்வு செய்ததில் 5 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது
மேலும் அமெரிக்கா மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களுடன், நீண்ட கால பேட்டரி பேக்கப் மற்றும் இன்ஃப்ராரெட் அடிப்படையிலான ஹைடெக் அம்சங்களுடன் ட்ரோன் பொருத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை தலைமை இயக்குனர் கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.
English Summary
Drone carrying heroin shot down near India Pakistan border in punjab