இந்தூர் ஐஐடியின் கவர்னர்கள் குழு தலைவராக டாக்டர் சிவன் நியமனம்.!!
DrSivan appointed as Chairman of IIT Indore Board of Governors
தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.சிவன் இந்தூர் ஐஐடியின் கவர்னர்கள் குழுவின் தலைவராக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு கல்வி ஆண்டு முதல் இந்தூர் ஐஐடியில் விண்வெளி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கவர்னர் குழுவின் தலைவராக இருக்கும் பேராசிரியர் தீபக் பி பாதக்கியிகன் பதவி காலம் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் டாக்டர் சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் ஆய்வுப் பணிக்காக அனுப்பிய சந்திரயான்-3 திட்டம் வெற்றிக்குப் பிறகு உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. இந்த நிலையில் டாக்டர் சிவன் 2018 முதல் 2022 வரை இஸ்ரோவுக்கு தலைமை தாங்கிய இவர் சந்திரயான்-2 திட்ட இயக்குனராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
DrSivan appointed as Chairman of IIT Indore Board of Governors