மேகாலயா || கடந்த 4 மாதத்தில் ரூ.18 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்.! 134 பேர் கைது.!
Drugs worth 18 crore seized in Meghalaya in last 4 months
மேகாலயாவில் கடந்த 4 மாதங்களில் ரூபாய் 18 கோடி மதிப்புள்ள போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இந்த கடத்தல் சம்பந்தமாக 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குனர் எல்.ஆர். பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, இதில் 3.62 கிலோ ஹெராயின், 4,500 கிலோ கஞ்சா, 150 பிராம் அபின், 145 இருமல் மருந்துகள் மற்றும் 11,902 ஆம்பெடமைன் மாத்திரைகள், 31 வாகனங்கள், 90 செல்போன்கள் மற்றும் ரூ.24.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை 48 வழக்குகளில் போதை பொருள் கடத்தல்காரர்கள் 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 123 பேர் மேகாலயாவையும் 11 பேர் அசாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் போன்ற பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஒரு வழக்கில் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், மாநிலத்தில் 8 மாவட்டங்களில் அதிக அளவு போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Drugs worth 18 crore seized in Meghalaya in last 4 months