அதிரடி சோதனை : குஜராத்தில் வேதியியல் நிபுணர் வீட்டில் ரூ.121 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் வேதியியல் நிபுணர் வீட்டில் ரூ.121 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள சிந்துராட் கிராமத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில், போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், கடந்த மாதம் 29ஆம் தேதி அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது தொழிற்சாலையில் ரூ.478 கோடி மதிப்பிலான 'மெப்ட்ரோன்' எனப்படும் போதைப்பொருள் மற்றும் அதை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த போதைப்பொருள் தொடர்பாக வேதியியல் நிபுணர் ஷைலேஷ் கட்டாரியா என்பவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

இதையடுத்து விசாரணையின் அடிப்படையில் நேற்று முன்தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் வதோதராவில் உள்ள ஷைலேஷ் கட்டாரியாவின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ.121 கோடி மதிப்புள்ள 24.28 கிலோ மெப்ட்ரோன் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drugs worth Rs 121 crore seized in Gujarat


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->