போதை ஆசாமி!!!மதுபோதையில் கார் ஓட்டியதால் விபத்து...!!! வாகனங்கள் மீது மோதும் வைரல் வீடியோ....!!!
Drunk driver Accident viral video crashing into vehicles
ராஜஸ்தான் ஜெய்ப்பூரிலுள்ள பரபரப்பான தெரு ஒன்றில் நேற்று மாலை சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து, சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மற்றும் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்.இதைப் பார்த்துக்கொண்டிருந்த சாலையோர மக்கள் காரை துரத்திச் சென்று பிடித்ததில், கார் ஓட்டியவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை சரமாரியாக அடித்து தாக்கினர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர்.
ஆனால் படுகாயமடைந்தவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் மற்ற 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் குடிபோதையில் கார் ஓட்டிய நபரை கைது செய்தனர்.மேலும் விசாரணையில் அவர் அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி உஸ்மான் கான் என்று தெரியவந்தது.
இதையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் மாவட்ட தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
English Summary
Drunk driver Accident viral video crashing into vehicles