கொளுத்தும் கோடை வெயில் : கடும் வெப்ப அலையால் இந்தியாவில் 114 பேர் பலி..!! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கத்திரி வெயில் முடிந்த பிறகும் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்திரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய பல மாநிலங்கள் இந்த கடும் வெப்ப அலையால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 

மேலும் பல மாநிலங்களிலும் சராசரி வெப்பநிலையை விட சுமார் 8 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கமாக உள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி வரை பதிவான அதிகப்படியான வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு நாடு முழுவதும் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

மேலும் சுமார் 41000க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் இந்த  புள்ளி விவரத்தின்படி அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் தான் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சுமார் 36 பேர் உத்திரபிரதேசத்தில் வெப்ப அலையின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். 

இதற்கு அடுத்தபடியாக பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான மக்கள் கடும் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வெப்ப அலையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்" என்று மத்திய சுகாதாரத் துறை  மந்திரி ஜே. பி. நட்டா கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due To Heat Wave 114 Peoples Died in India


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->