காலையிலேயே குலுங்கிய வீடுகள் - நிலநடுக்க பீதியில் சிக்கிம் மக்கள்.!
earthquake in sikkim
நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என்று பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன.
சமீபத்தில் கேரளம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு நானூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், சிக்கிம் மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் சிக்கிம் மாநிலத்தின் சோராங் பகுதியில் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். மேலும், நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.