டெல்லி தோல்வி எதிரொலி .. காங்கிரஸ்,ஆம் ஆத்மியை கடுமையாக சாடிய சிவசேனா!
Echo of Delhi defeat .. Shiv Sena slams Congress, AAP
டெல்லியில், ஆம் ஆத்மியும் காங்கிரஸும் ஒன்றையொன்று அழிக்கப் போராடின என்றும் இது பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷாவுக்கு விஷயங்களை எளிதாக்கியது என்றும் இது தொடர்ந்தால், ஏன் கூட்டணிகளை உருவாக்க வேண்டும்? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி சட்ட சபை தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பறியது , மேலும் இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை பாஜக தோற்கடித்தது ஆட்சியை கைப்பற்றியது. இதில் காங்கிரஸ் கட்சியும் மோசமான தோல்வியை தழுவியது.
இந்தநிலையில் இதுகுறித்து சிவசேனா உத்தவ் கட்சி தனது 'சாம்னா' நாளிதழில் கூறியிருப்பதாவது: டெல்லியில், ஆம் ஆத்மியும் காங்கிரஸும் ஒன்றையொன்று அழிக்கப் போராடின என்றும் இது பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷாவுக்கு விஷயங்களை எளிதாக்கியது என்றும் இது தொடர்ந்தால், ஏன் கூட்டணிகளை உருவாக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்தது மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு 3-வது முறையாக ஒரு இடம் கூட கிடைக்காமல் போனது என கூறியுள்ளார். மேலும் டெல்லி சட்டசபை தேர்தலில் 'இந்தியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனித்து போட்டியிட்டு இருந்தது என்றும் இந்தநிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மோதி கொண்டது டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு உதவியதாக உத்தவ் சிவசேனா கட்சி கூறியுள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:- டெல்லியில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் ஒன்றையொன்று அழிக்கப் மோதிக்கொண்டன. இது பா.ஜனதாவின் வெற்றியை எளிமையாக்கியது. மேலும் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவின் பணி எளிமையானது.
'இந்தியா' கூட்டணியை நாடாளுமன்றத்துக்குள் மட்டுமே காண முடிகிறது. எல்லா இடங்களிலும், தெருக்களிலும் 'இந்தியா' கூட்டணியை காண வேண்டிய நேரம் வந்துவிட்டது. டெல்லியில் 14 இடங்களில் ஆம் ஆத்மி தோல்விக்கு காங்கிரஸ் பங்களித்து உள்ளது. அரியானா தேர்தலிலும் இதை காண முடிந்தது. காங்கிரஸ் உள்கட்சி பிரிவுகள் ராகுல் காந்தியின் தலைமையை திட்டமிட்டு குறைத்து மதிப்பிடுகிறதா?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Echo of Delhi defeat .. Shiv Sena slams Congress, AAP