நாய் துரத்தியதால் பயந்து ஓடிய சிறுவன்... கால்வாயில் விழுந்து பலியான சோகம்!
Boy gets scared after being chased by dog The tragedy of drowning in the canal!
கொல்லம் அருகே நாய் துரத்தியதால் பயந்து ஓடிய சிறுவன் கால்வாயில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நிரப்பு விளையை சேர்ந்த தம்பதி அனீஷ் மற்றும் இவருடைய மனைவி பிந்து. இவர்களுடைய 8 வயது மகன் யாதவ் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று முன்தினம் சம்பவத்தன்று இரவு 7.30 மணிக்கு யாதவின் பாட்டி அந்த பகுதியில் உள்ள கால்வாயின் அருகே நின்று கொண்டிருந்தார் என கூறப்படுகிறது . அப்போது அந்த சிறுவன் பாட்டியிடம் செல்வதற்காக ஓடி சென்றான். அந்த சமயத்தில் பார்த்த அங்கு நின்ற தெருநாய் ஒன்று யாதவை பார்த்து குரைத்தபடி கடிப்பது போல ஓடி வந்தது என கூறப்படுகிறது.
அப்போது இதனால் பயந்து போன யாதவ் கால்வாயின் நடை பாதை வழியாக ஓடியபோது கால் வழுக்கியதால் கால்வாயில் விழுந்து தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டான். உடனடியாக இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பாட்டி செய்வதறியாது கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடையில் விழுந்த யாதவை தேடினர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நீண்டநேர தேடுதலுக்கு பிறகு கால்வாயில் நிரப்புவிளை பகுதியில் இருந்து யாதவை பிணமாக மீட்டனர். இதையடுத்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொட்டாரக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கொட்டாரக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கொல்லம் அருகே நாய் துரத்தியதால் பயந்து ஓடிய சிறுவன் கால்வாயில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Boy gets scared after being chased by dog The tragedy of drowning in the canal!