திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இபிஎஸ் குடும்பத்துடன் வழிபாடு! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். 

பிறகு மட வீதியில் உள்ள கோவிலில் தரிசனம் செய்து அங்கேயே அமர்ந்து கண்மூடி தியானம் செய்தார். நேற்று இரவு தேவஸ்தான விடுதியில் தங்கியிருந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அஷ்ட தலபாத பத்மாராதனை சேவையில் பங்கேற்று ஏழுமலையானை வழிபட்டார். 

சாமி தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தானம் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அஷ்ட தலபாத பத்மாராதனை சேவை என்பது செவ்வாய்க்கிழமை நாட்களில் மட்டுமே நடைபெறும். 

இதில் அரை மணி நேரம் நிதானமாக ஏழுமலையானை தரிசனம் செய்ய ரூ. 1250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பூஜையை எடப்பாடி பழனிச்சாமி செய்து ஏழுமலையானை வழிபட்டார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, அயோத்தி ராமர் கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். அனைவரும் தரிசனம் செய்யலாம். 

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை தான் கடைபிடிக்கப்படுகிறது. 

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுகவில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami special pooja tirupathi temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->