பாலத்தில் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!
eight peoples died for bus accident in punjab
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தல்வாண்டியில் இருந்து பதிண்டா நோக்கி இன்று பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து, பாலத்தில் இருந்து ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் விரைந்து சென்று பேருந்திற்குள் சிக்கியவர்களை மீட்கத் தொடங்கினர். மேலும் சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
அதன் படி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் போலீசார் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பாலத்தில் தடுப்பு சுவரோ, தடுப்பு கட்டைகளோ எதுவும் இல்லை. தடுப்பு கட்டைகள் இருந்திருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம். பேருந்து சறுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதற்கு கனமழை காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பேருந்து அதிவேகத்தில் சென்றதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரசு உதவிகள் வழங்கப்படும் என்றும் பதிண்டா துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
English Summary
eight peoples died for bus accident in punjab