13 மாநிலத்தில் 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முடிந்த நிலையில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவானது கேரளா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. 

இதன் காரணமாக இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவடைகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜக சார்பில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

தென்னிந்தியாவில் பாஜக அதிக தொகுதிகளை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படும் கர்நாடகாவில் பாஜக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் அதனைத் தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனடியாக  நிர்வாகிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election campaign end today evening in 13 States


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->